வவுனியாவில் பெண் ஊடகவியலாளர் ஒருவரின் வீடு இன்று பட்டப் பகலில் உடைக்கப்பட்டு பணம், நகை, கமரா என்பன திருடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது.
வவுனியா, உக்குளாங்குளத்தை உள்ள ஊடகவியலாளரின் வீட்டிலேயே திருட்டு நடந்துள்ளது.
காலையில் வெளியே சென்று விட்டு மதியம் 12.15 மணியளவில் ஊடகவியலாளர் வீடு திரும்பியபோது வீடு உடைக்கப்பட்டிருந்துள்ளது.
வீட்டில் இருந்த 14 பவுண் நகைகள், பணம், கமரா, தொலைபேசி போன்றவை திருடப்பட்டிருந்தன என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.