மின்சார சபையின் கடனைத் தீர்க்க 80 பில்லியன் ரூபாயை விடுவிக்க நடவடிக்கை-மஹிந்த

217 0

மின் உற்பத்திக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை மின்சார சபை பெற்ற கடனை அடைக்க அரசாங்கம் 80 பில்லியன் ரூபாயை விடுவிக்கவுள்ளது.

அதற்கமைய, 80 பில்லியன் ரூபாய் திறைசேரியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இம்முறை எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டபோதிலும் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு எரிபொருளின் விலைகளை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் சமீப காலங்களில் கச்சா எண்ணெயின் விலை மிக உயர்ந்த புள்ளியை எட்டியுள்ள போதிலும் உள்நாட்டில் எரிபொருள் விலையை நிலையானதாக வைத்திருக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.