இலங்கையின் முன்னணி வர்த்தக குழுமம் ஒன்று, கொழும்பில் 70 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஆடம்பர சொகுசு ஹோட்டலினை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதுடன், இதற்காக அரசாங்கத்திடமிருந்து வரி சலுகைகளை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த ஹோட்டல் கொழும்பு 03 இல் 652 அறைகளுடன், நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், இதற்காக 2008 ஆம் ஆண்டு மூலோபாய அபிவிருத்தி திட்ட சட்டத்தின் கீழ் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.