அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்காக இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடனுக்கான உடன்படிக்கைகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அனைத்து உடன்படிக்கைகளும் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இதன்படி, விரைவில் இந்தியா அல்லது இலங்கையில் குறித்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நிலவும் நிதி நெருக்கடியை போக்குவதற்கு தமது நாடு முதலீடு செய்ய தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு இந்திய அரசாங்கம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.