அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய வர்த்தக கூட்டு ஒப்பந்தத்தை அந்த நாட்டின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.
அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து உள்ளிட்ட 12 பசுபிக் நாடுகளுக்கு இடையில் இந்த உடன்படிக்கை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தினால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
இது அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அனர்த்தம் என்று டொனால்ட் ட்ரம்ப் தமது தேர்தல் பிரசாரங்களின் போது தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் குறித்த உடன்படிக்கையை ரத்து செய்ததன் ஊடாக, தாம் அமெரிக்காவை பாதுகாத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு சர்வதேச அமைப்புகளுக்கான நிதி வழங்கல்களையும் ரத்து செய்திருபபதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்காவின் புதிய ராஜாங்க செயலாளராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்த றெக்ஸ் டில்லர்சன்னுக்கு, அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது அவருக்கு முழு செனட் சபையின் அனுமதி கோரப்பட்டுள்ளது.