பொது மக்களின் உடமைகளை அடித்து தீ வைக்கும் காவற்துறையினர்

286 0

தமிழ் நாட்டின் காவற்துறையினர் ஏறுதழுவுதல் போட்டிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற போராட்டத்தின் போது செயற்பட்ட விதம் குறித்து பல்வேறு தரப்பினரால் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

சென்னை – மெரீனா கரையில் இடம்பெற்று வந்த அமைதி போராட்டத்தில் நேற்று காலையில் இருந்து கலவரம் ஏற்பட்டது.

இதற்கு சில சமுகவிரோதிகளின் செயற்பாடே காரணம் என்று காவற்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனப்போதும், காவற்துறை அதிகாரிகள் திட்டமிட்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியமை, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளுக்கு தீ வைத்தமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பான காணொளிகள் வெளியாக்கப்பட்டுள்ளன.

காவற்துறையினர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்கள்? என்பது தொடர்பில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.