சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோருவதில் இலங்கை முன்னணியில்

306 0

சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்களில் இலங்கையர்களும் முன்னணி வகிக்கும் நாட்டவர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்த்து கோரியவர்களின் எண்ணிக்கை 3ல் ஒரு பங்காக குறைவடைந்துள்ளது.

எனினும் இலங்கையர்களின் அகதி அந்தஸ்த்து கோரும் விண்ணப்பங்கள் அதிகரித்த நிலையிலேயே இருக்கிறது.

எரிட்டேரியாவைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா ஆகிய நாடுகளை அடுத்து இலங்கையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.