பெரியகுளம் மட்டுமின்றி அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய தேனி அல்லிநகரம், போடி, கூடலூர் உள்பட மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் தி.மு.க. கூட்டணி 15 வார்டுகளில் வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி 26வது வார்டில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்தும் அதே வார்டில் குடியிருந்து வருகிறார்.
இந்த வார்டில் அ.தி.மு.க. சார்பில் மஞ்சுளா, தி.மு.க. சார்பில் சந்தானலட்சுமி, அ.ம.மு.க. சார்பில் வனிதா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. வேட்பாளர் சந்தானலட்சுமி 451 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.திமு.க. வேட்பாளருக்கு 352 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியான சண்முகசுந்தரம் பெரியகுளம் நகராட்சி 24வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். அவர் 503 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமு.க. வேட்பாளர் செந்தில்குமார் 406 வாக்குகள் பெற்றார்.
பெரியகுளம் மட்டுமின்றி அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய தேனி அல்லிநகரம், போடி, கூடலூர் உள்பட மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது. குறிப்பிடத்தக்கது.