எதிர்வரும் சில நாட்களில் பரசிட்டமோல் தட்டுப்பாடு பூர்த்தி செய்யப்படும் – சன்ன ஜயசுமண

202 0

ஒமிக்ரோன் தொற்று டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களின் அச்சுறுத்தல்களின் காரணமாக கடந்த மூன்று வாரங்களில் பரசிட்டமோல் மாத்திரைகளுக்கான தேவை 275 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மருந்து உற்பத்தி வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், ஓயாமடுவ பிரதேசத்தில் இன்று சுவசிறி புர’ மருத்துவ உற்பத்தி வலயத்தை நிர்மாணிப்பது தொடர்பாக மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உலக சந்தையில் பாராசிட்டமோல் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் அவற்றை இறக்குமதி செய்வதை தவிர்த்து வருகின்றன.

இதனால் உள்ளுர் சந்தையில் பாராசிட்டமோல் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே தேவையான இருப்பிலுள்ள பாராசிட்டமோல் மாத்திரைகளை அவற்றின் அதிகபட்ச கொள்ளளவில் தயாரிப்பதற்கு  மருந்து உற்பத்தி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளதுடன் தினமும் மூன்று மில்லியன் பாரசிட்டமோல் மாத்திரைகளையும் தயாரித்து வருகின்றது.

எனவே பாராசிட்டமோல் மாத்திரைகளின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்குள் தட்டுப்பாடு பூர்த்தி செய்யப்படும் என்றார்.