ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும் கடுவெல அமைப்பாளருமான ஜீவன் குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாட்டின் பஞ்ச மகா சக்திகள் வாழும் உரிமையை கோரி, வீதியில் போராடி வரும் வேளையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், கட்சியின் கொள்கைகளை மறந்து, இரட்டை நிலைப்பாட்டை கையாண்டு வருகிறார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாக தனது மனசாட்சி இணங்க தொடர்ந்தும் கட்சியில் இருக்க முடியாது என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்து அனைத்து பதவிகள் மற்றும் கட்சியின் அங்கத்தில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சுமார் 35 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். ஆனால், இன்று ஒரு சோகமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
கட்சியில் நான் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக கட்சியின் செயலாளரிடம் தெரிவித்துள்ளேன் என அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜீவன் குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அரசாங்கங்களில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.
அத்துடன் அவர் சிங்கள திரைப்படத்துறையின் முன்னாள் சூப்பர் ஸ்டார் விஜய குமாரதுங்கவின் மகன் முறை உறவினராவார்.