உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற மேலும் நான்கு சிறப்பு விமானங்கள்

216 0

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ள நிலையில், இந்திய அரசு இந்தியர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து வருகின்றன. ஆனால், ரஷியா மேற்கு நாடுகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. ரஷியா படைகளை உக்ரைன் எல்லையில் நிறுத்தி வைத்துள்ள நிலையில், உக்ரைன் கிழக்கு பகுதியில் உள்ள உக்ரைன் அரசுக்கு எதிராக செயல்படும் போராட்டக்காரர்கள் தாக்குதலுக்கு தயாராகி வருகிறார்.
இதனிடையே உக்ரைனில் இருந்து ரஷியாவுக்கு தப்ப முயன்றதாக எல்லையில் ரஷிய ராணுவம் இரண்டு பேரை சுட்டுக்கொன்றது. உக்ரைனின் டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக புதின் அறிவித்துள்ளார். இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது.
உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள், மாணவர்கள் தற்காலிகமாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சிறப்பு விமானங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில், மேலும் நான்கு விமானங்கள் கிவ்-ல் இருந்து டெல்லிக்கு பிப்ரவரி 25, பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 6-ந்தேதிகளில் இயக்கப்படும் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.