இலங்கையில் இருந்து வெளிநாடு செல்வதற்காக விமான நிலைய அதிகாரிகளுக்கு சமர்பிக்கும் PCR அறிக்கை போலியாக தயாரிக்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 3 பேரை கைது செய்வதற்கு குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதான தரப்பு வைத்தியசாலைக்கு சமமான முறையில் இந்த போலி PCR அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நபர்களால் நீண்ட நாட்களாக இவ்வாறு போலி PCR அறிக்கைகள் வெளியிடப்பட்ட நிலையில் அதன் பிரதான தரப்பு வைத்தியசாலையின் QR குறியீட்டை நுட்பமான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த போலி அறிக்கையை பெற்றுக் கொண்ட நபர்கள் பலர் அதனை பயன்படுத்தி வெளிநாடு சென்றுள்ளதாக குற்ற விசாரணை திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மினுவங்கொடை மற்றும் தர்கா நகரங்களில் வாழும் நபர்கள் என தெரியவந்துள்ளது.
ஒரு PCR அறிக்கைக்காக 6000 ரூபாய் பணம் அறிவிடுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.