அரசியல் அதிகாரத்தை பலப்படுத்த முயலும் அரசியல்வாதிகள்: தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

191 0

நாட்டில் உள்ள பல அமைச்சர்கள் தமது அரசியல் அதிகாரத்தைப் பலப்படுத்த முயல்கின்றனர் என்பது அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அவதானிக்கும் போது தெளிவாகின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில்,

இவ்வாறு முரண்பாட்டுக்களை கொண்டு செயற்படுவது மக்களுக்குச் சிறந்த சேவை செய்வதற்கான நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.

அதேசமயம் தனிநபர்களின் அரசியல் நலன்களுக்காக சில விடயங்களைச் செய்வதைத் தவிர்த்து நாட்டினதும் மக்களதும் நலனுக்காக உழைக்க வேண்டியது அவசியம்.

அதுமட்டுமன்றி நாட்டில் அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையே கூட முரண்பாடுகள் காணப்படுகின்றன.

எனவே முரண்பாடுகளைத் தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.