இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் விருப்பம்

210 0

இந்தியாவுடனான வர்த்தகம் காலத்தின் தேவை என்று, இம்ரான்கானின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்துச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2019 ஆண்டு முதல் இந்தியாவுடனான வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டது.
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வர்த்தக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், இந்தியாவுடன், பாகிஸ்தான் மீண்டும் வர்த்தக உறவை தொடங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான வர்த்தகம் காலத்தின் தேவை,  இரு நாடுகளுக்கும் இது நன்மை பயக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜவுளி, தொழில், உற்பத்தி மற்றும் முதலீடு ஆகியவற்றில் இந்தியாவுடனான வர்த்தகம் பாகிஸ்தானுக்கு மிகவும் நல்ல பலனை அளிக்கும்  என்பதால் நான் அதை ஆதரிக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு, இந்தியாவில் இருந்து சர்க்கரை மற்றும் பருத்தியை இறக்குமதி செய்வதற்கான தடையை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நீக்கியது. எனினும் அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.