மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தேசிய மின் உற்பத்திக்கு 541 மெகாவோட் இழப்பு ஏற்பட்டுள்ளதால், நாளையதினம் (22) 8 வலயங்களுக்கு 3 மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க A, B மற்றும் C பிரிவுகளுக்கு மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணிக்கு உட்பட்ட காலப்பகுதியில் 2 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதேவேளை, ஏனைய பிரிவுகளுக்கு 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.