கொழும்பு பங்குச் சந்தை சில நிமிடங்களுக்கு நிறுத்தம்

169 0

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை இன்று பிற்பகல் 1.44 மணியளவில் 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

முந்தைய வர்த்தக நாளை விட S&P SL20 சுட்டெண் 5%க்கு மேல் சரிந்ததே இதற்குக் காரணமாகும்.

அதன்படி, ​​அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 540.43 புள்ளிகளும், S&P SL20 சுட்டெண் 207.60 புள்ளிகளும் சரிந்தன.

பிற்பகல் 2.14 மணிக்கு வர்த்தகம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.