இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு (PCCSL) ஆகியவற்றில் பணியாற்றிய நிலையில் திடீரென மரணமடைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கமல் லியனாராச்சியின் (kamal liyanarachchi) இறுதி கிரியை பயாகலவில் இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர், நேற்று (21) இரவு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது குடும்பத்தினருக்கு தமிழ்மிரர் திணைக்களத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.