பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ரத்மலானே ரோஹாவின் உறவினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கையடக்கத் தொலைபேசியை அடகு வைத்த சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவ – கல்தெமுல்ல பகுதியைச் சேர்ந்த 33 வயதான அசங்க சில்வா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஓட்டோ சாரதியாவார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.