கண்டியிலிருந்து பதுளை நோக்கு புறப்பட்ட சரக்கு புகையிரதம் வட்டவளை ரொசல்லை பகுதியில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த புகையிரதம் இன்று (18) அதிகாலை கண்டியிருந்து பதுளை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த புகையிரம் கண்டி பதுளை பிரதான புகையிரத பாதையில் ரொசல்லை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் காலை 7.00 மணியளவில் தடம்புரண்டுள்ளது.
இதனால் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த புகையிரதத்தில் பதுளை நோக்கி பயணித்த பயணிகளும் சிரமங்களுக்கு உட்பட்டுள்ளன.
குறித்த புகையிரம் தடம் புரண்டதன் காரணமாக புகையிரத சமிஞ்ஞை கட்டுப்பாட்டு தொகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.
குறித்த புகையிரத்தினை தண்டவாளங்களில் அமர்த்துவதற்காக நாவலபிட்டியிலிருந்து திருத்து குழுவினர் வருகை தரவுள்ளதாகவும் மிக விரைவில் புகையிரம் பயணங்கள் வழமைக்கு திரும்பவுள்ளதாக நவாலபிட்டி புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்