சிறுவர்கள் தொடர்பான குற்றச்சாட்டில் கனடாவில் தமிழர் ஒருவர் கைது!

206 0

2020ம் ஆண்டின் ஆரம்பத்தில் சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கனடாவில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவர் தற்போது கூடுதல் குற்றச் சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதான கார்த்திக் மணிமாறன் என்பருக்கு எதிராகவே இவ்வாறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2020 டிசம்பரில் விட்பி பகுதியில் உள்ள வீட்டில் சோதனை மேற்கொண்டதை தொடர்ந்து டர்ஹாம் பொலிஸார் சிறுவர் ஆபாசக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும், இதன் போது பல்வேறு மின்னனு சாதனங்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

அமெரிக்காவின் உதவியுடன் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, புலனாய்வாளர்கள் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளை அடையாளம் கண்டுள்ளனர் என்று டர்ஹாம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க அதிகாரிகள் பாதிக்கப்பட்ட அனைவரையும் கண்டுபிடித்துள்ளனர் மற்றும் அவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் 2020ம் ஆண்டில் ஸ்னாப்சாட், டிக்ரொக், ஒமேகிள், லைக் மற்றும் கிக் மெசஞ்சர் உள்ளிட்ட பல ஒன்லைன் பயன்பாடுகளைப் பயன்படுத்தியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். டர்ட்போய், டர்டிபோய், டாடி டர்ட்டி, வைரஸ் ரெட் பீஸ்ட் மற்றும் ராக் ஷான் ராக் உள்ளிட்ட பெயர்களைப் பயன்படுத்தி ஒன்லைனில் செயற்பட்டுள்ளார்.

மணிமாறன் மீது முதலில் 2021ம் ஆண்டு சிறுவர் ஆபாச படங்கள் வைத்திருந்தது, குழந்தைகளின் ஆபாசத்தை அணுகியது மற்றும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை விநியோகித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்நிலையில், அவருக்கு எதிராக தற்போது கூடுதல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிறுவர்களின் ஆபாச படங்களுடன் மிரட்டி பணம் பறித்தல், மிரட்டல் விடுத்தல் குற்றவியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.