புத்தளம் – ஆனமடுவ ரம்பேவெவ பகுதியில் உள்ள கல் குவாரிகளால் தமது கிராமங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாக கூறி, ஆனமடுவ ரம்பேவெவ கிராம மக்கள் இன்று ( 17) ஆனமடுவ – சிலாபம் வீதியை மறைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரம்பேவெவ, சியம்பலேவ, அம்பிடிகம, நெபடவெவ மற்றும் கோரலயாகம ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200 இற்கும் மேற்பட்டோர் , பதாதைகளை ஏந்தியவாறு ரம்பேவெவ கல் குவாரிக்கு பேரணியாக நடந்து சென்றனர்.
இவ்வாறு கல் குவாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுத்த போது, பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் 50 இற்கும் மேற்பட்ட கல்குவாரி ஊழியர்கள், வீதியின் மறுபுறத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆனமடுவ – சிலாபம் வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டதோடு அங்கு பதற்ற நிலையும் ஏற்பட்டிருந்தது.