உத்தேச மேலதிக கட்டண வரி மசோதாவில் இருந்து ஊழியர் வருங்கால வைப்பு நிதியை (EPF) விடுவிக்க கட்சி பெரும் பங்களிப்பை வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராணா ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். உத்தேச வரியில் எதிர்காலத்தில் மீண்டும் திருத்தம் செய்யப்படுமா என்பது தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
EPF ஐக் காப்பாற்றும் முயற்சிகளுக்கு உதவிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், ஏனைய எதிர்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் ஏனையோருக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று நோய்களின் போது குறைந்த வருமானம் பெறுவோருக்கு ரூ.5,000 கொடுப்பனவை வழங்குவதற்கு தற்போதைய நிர்வாகம் சமுர்த்தி நிதியை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கம் மீண்டும் நிதியை அபகரிக்க முயற்சிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடமிருந்து அண்மையில் 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளை அரசாங்கம் மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில விரிவாக ஏற்றுக்கொண்ட நிகழ்வு வெட்கக்கேடானது என்றும் அவர் மேலும் விமர்சித்தார்.