மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் நடைமுறைத் தன்மை தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக இலங்கை மின்சார சபையின் மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்கனவே பல மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதா கவும், மின் விநியோகத்தை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.
தற்போது செயலிழந்துள்ள சில மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் சுமார் இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, மின்வெட்டு இல்லாமல் கட்டமைப்பை பராமரிப்பது மிகவும் கடினம் என்றார்.