ஹொரணையில் குழந்தையைக் கடத்திய சந்தேக நபர் துப்பாக்கிச்சூட்டில் பலி

193 0

ஹொரணை கந்தானை பிரதேசத்தில் பாட்டியின் பராமரிப்பில் இருந்த குழந்தையைக் கடத்திய சந்தேக நபர் இன்று (17) பிற்பகல் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

சடலம் ஹொரண ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அங்குருவாதோட்டை வல்பிட்ட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த சந்தேக நபர் குறித்த வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் சுற்றிவளைத்த போது பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

பொலிஸாரின் பதில் தாக்குதலால் சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் குடும்பத் தகராறு தொடர்பாக அவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.