நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்களை காணவில்லை

233 0

நாட்டின் இருவேறு பிரதேசங்களில் நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.

கல்​​ெதாட்ட மற்றும் உப்பு​ெவலி பிரதேசங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உப்புவெலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவௌி பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் அமைந்துள்ள கடற்கரையில் நீராட சென்ற இளைஞர் குழுவில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

21 வயதுடைய தலாதுஓய பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

நீராடிக் கொண்டிருந்த போது குறித்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் இரண்டு நண்பர்கள் அவரை காப்பாற்ற முற்பட்ட போது அவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனையடுத்து உயிர் பாதுகாப்பு படையின் அதிகாரிகள் உடன் செயற்பட்ட இருவரை காப்பாற்றியுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதேவேளை, கல்தொட, குடா துவிலி நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற கஹவத்த பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணி புரியும் சிலரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

26 வயதுடைய கஹவத்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன இருவரையும் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து செயற்பட்ட வருகின்றது.