கம்பஹா நகரின் பிரபல மேலதிக வகுப்பின் பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா

218 0

கம்பஹா நகரில் அமைந்துள்ள பிரபலமான மேலதிக வகுப்பின் பெண்கள் கழிவறையில், நவீன இரகசிய கமரா ஒன்று பொருத்தப்பட்டிருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிலையில் அது தொடர்பில் பொலிஸ் தகவல் தொழில் நுட்ப பிரிவின் உதவியுடன் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில்,  குறித்த மேலதிக வகுப்பு உரிமையாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 10 பேரின் வாக்கு மூலங்கள் இன்று நண்பகலாகும் போதும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய  உயர் பொலிஸ் அதிகாரி,  மிக விரைவில் கமராவை பொருத்திய சந்தேக நபரை கைது செய்ய முடியும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.