வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி அருள்செல்வம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வின்போது வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்கூட்டியே கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி அருள்செல்வம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா கூடுதல் பொறுப்பாக இதனை கவனிப்பார் என்று பள்ளி கல்வி இணை இயக்குனர் நரேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த கூடுதல் பொறுப்பினை ஏற்கும் கல்வி அதிகாரி அந்த பணியிடத்தில் மறு அலுவலர் பணி ஏற்கும் வரை முழு கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதித்து ஆணை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.