ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாடு – 12 குழந்தைகள் உயிரிழப்பு

197 0

பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆப்கானிஸ்தான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
ஆப்கானிஸ்தான் அரசாங்க சொத்துக்கள் முடக்கம் மற்றும் தாலிபான் மீதான சர்வதேச தடைகள், வெளிநாட்டு உதவி நிறுத்தம், ஆகியவற்றால் அந்நாட்டு மக்கள் கடும் வறுமையில் சிக்கியுள்ளனர்.
அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஆப்கானிஸ்தானில்  10 லட்சம் குழந்தைகள் உணவின்றி உயிரிழக்கும் அபாயம் நீடிப்பதாக ஐ.நா. குழந்தைகள் நிதியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் குண்டூஸ் மாகாணத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை ஊட்டச்சத்து குறைபாட்டால் 12 குழந்தைகள் இறந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் போதிலும், பராமரிப்பு மையங்கள் எதுவும் செயல் படவில்லை என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
 ஊட்டச்சத்து குறைபாடுள்ள 438 குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை ஊட்டச்சத்து துறையின் தலைவர் ஹமாயூன் சாஃபி தெரிவித்துள்ளார்.