பாராளுமன்றத்தில் 28 பேருக்கு கொரோனா

177 0

பாராளுமன்றத்தின் சில பிரிவுகளின் மூன்று பிரதானிகள் உட்பட மேலும் 28 ஊழியர்கள், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று (14) கண்டறியப்பட்டது.

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று காலை, 112 பணியாட் தொகுதியினருக்கு பரிசோனை மேற்கொள்ளப்பட்டபோது, அதில் 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 28 பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த சில வாரங்களில் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளான பணியாட் தொகுதியினரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இதுவரை 49 எம்.பி.க்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், பாராளுமன்றத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அதன் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுவதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற வளாகத்துக்கென தனி சுகாதாரத் திட்டமும் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பாராளுமன்ற வளாகத்துக்கு வெளியாட்களை வரவழைப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.