இலங்கை விமான நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிக்கு அழைப்பாணை

302 0

295381360Courtsஎச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி பணியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்காக, இலங்கை விமான நிறுவனத்திற்கு எதிராக விமான நிறுவன ஊழியர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை விமான நிறுவனத்தில் பணியில் இணைந்து கொண்ட தன்னை எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி பணியிலிருந்து நீக்குவதற்கு, இலங்கை விமான நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி நடவடிக்கை எடுத்ததாகவும், இதனால் தனது உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக தன்னை பணியில் இருந்து நீக்குவது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனு பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் உள்ளிட்ட நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மனுவை விசாரிக்க அனுமதியளித்ததாக அத தெரண நீதிமன்ற செயதியாளர் கூறினார்.

எதிர்வரும் மே மாதம் 30ம் திகதிக்கு முன்னர் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரதிவாதியான இலங்கை விமான நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.