சிறீலங்காவின் பிரதமராக எதிர்வரும் மார்ச் மாதம் சஜித் பிரேமதாச பதவியேற்கவுள்ளார் என ஆரூடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி சஜித் பிரேமதாச உரிய முறையில் சிறீலங்காவின் பிரதமராகப் சத்தியப்பிரமாணம் செய்து பதவி ஏற்பார் என முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் சோதிடரான சுமனதாஸ அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் கிரக மாற்றம் ஏற்படவுள்ளதெனவும், அதன் காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அவருக்கு நெருக்கமான பல அமைச்சர்கள் பதவி விலகவுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரணசிங்க பிரேமதாஸ, ஜனாதிபதியாகிய சந்தர்ப்பத்தில் பலமாக இருந்த கிரகம் இந்த மாதம் 26ஆம் திகதியின் பின்னர் சஜித் பிரேமதாஸவின் கிரகமும் அந்த அளவிற்கு பலமடையும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கி தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவே போட்டியிடவுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 12 வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு சஜித் பிரேமதாஸவே தலைமைதாங்குவார் எனவும் அவரின் காலத்திற்குப் பின்னர் சிங்கம் என்ற பெயர் கொண்ட இளம் வேட்பாளர் ஒருவர் தலைமைதாங்குவார் எனவும் தெரிவித்துள்ளாரென அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.