சாணக்கியனுக்கு கிடைத்துள்ள விருது

242 0

2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Institute of Politics என்ற அமைப்பினால் குறித்த விருது இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் நிகழ்வானது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது.

எனினும், மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகள் மற்றும் வேறு சில முக்கிய காரணங்களினால் இரா.சாணக்கியன் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருக்கவில்லை என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் Institute of Politics என்ற அமைப்பின் அலுவலகத்தில் வைத்து இரா.சாணக்கியனுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.