பண்டாரநாயக்க சமாதிக்கு அருகில் சுதந்திர தின நிகழ்வை நடத்தும் சந்திரிக்கா

214 0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம   ஆகியோர் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர்.

புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயரில் இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குமார வெல்கம இந்த கட்சியின் பெயரில் செயற்பட்டு வருகின்றார்.

புதிய கட்சியின் கீழ் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் தேசிய சுதந்திர தின வைபவத்தை நடத்த அவர்கள் தீர்மானித்துள்ளனர். கம்பஹா ஹொரகொல்லவில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு அருகில் இந்த சுதந்திர தின நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

இந்த சுதந்திர தின நிகழ்வில் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல உறுப்பினர்கள் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் நினைவு தின நிகழ்விலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, சுசில் பிரேமஜயந்த, அனுரபிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி, குமார வெல்கம ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.