சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை தமது பயணப் பொதிகளில் கொண்டு செல்ல முற்பட்ட ஐவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பணத்தில் 95,000 அமெரிக்க டொலர்கள், 18,000 யுரோக்கள் மற்றும் 37,000 சௌதி ரியால்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மதிப்பில் இந்த நாணயத்தின் பெறுமதி சுமார் 25 மில்லியன் ரூபாவாகும்.
சந்தேக நபர்களிடம் இலங்கை சுங்க திணைக்களத்தினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.