பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (28) பாணந்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
150,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட போதே அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருந்தார்..
சந்தேகத்திற்குரிய அதிபர், மாணவர் ஒருவரை முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்காக 200,000 ரூபாவை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அது 150,000 ரூபாவாக குறைக்கப்பட்டு அதனை பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.