நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (28) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,400 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி நேற்று உயிரிழந்தவர்களில் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 2 பேரும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.