அவுஸ்திரேலியாவில் தமிழ் குடும்பத்திற்கு சார்பாக நீதிமன்றம்தீர்ப்பு -அமைச்சர் நியாயமற்ற விதத்தில் நடந்துகொண்டதாக தெரிவிப்பு

304 0
மொறிசன் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்குவந்தால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அச்சம்
நடேஸ்பிரியா குடும்பத்தினர் பிரிட்ஜிங் விசா பெறுவதை தடுப்பது நடைமுறைரீதியாக நியாயமற்ற விடயம் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடேஸ் குடும்பத்தினர் பிரிட்ஜிங் விசாக்களிற்கு மீண்டும் விண்ணப்பிப்பதை தடுப்பதற்காக உள்துறை அமைச்சர் அலக்ஸ் ஹாக் கடந்த வருடம் ஜூன் மாதம்தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி எடுத்த முடிவை நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது.
கடந்த வருடம் இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு தந்தை தாய் -மகள்மூவரும் பேர்த்தில் சமூக தடுப்பில் வாழ்வதற்கான அனுமதியை உள்துறை அமைச்சர் வழங்கியிருந்தார்.
அதேவேளை உடல்நலம்பாதிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ்தீவிலிருந்து பேர்த்கொண்டு வரப்பட்டஇளையமகள் தர்ணிகாவிற்கு மருத்துவகிசிச்சைவழங்கப்பட்டது.
எனினும் ஜூன்மாதம்15 ம்திகதி தமிழ் குடும்பத்திற்கு அனுப்பியகடிதத்தில் அவர்கள்மீண்டும் பிரிட்ஜிங் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்குஅனுமதிக்கப்போவதில்லை என உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
தமிழ் குடும்பத்தினரின் நண்பரான ஏஞ்சலா பிரெட்ரிக்ஸ் இது பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார்.
  
எங்கள் குடும்பத்திற்கு எதிராக அமைச்சர் நடைமுறையில் நியாயமற்றவர் என்பது கண்டுபிடிக்கப்பட்ட மற்றுமொருதருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை நாங்கள் பெரிய வெற்றியாக ஏன் கருதுகின்றோம் என்றால் எங்கள் நண்பர்களை பொறுத்தவரை பல அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இந்த அதிகாரங்களை பயன்படுத்தி சரியானதை செய்யவேண்டும் அவர்கள் பயலோலா வருவதற்கு அனுமதிக்கவேண்டும் என்பதையே நாங்கள் கேட்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்தது என்ன ?
பிரியா நடேஸ் கோபிகா மூவரினதும் பிரிட்ஜிங் விசாக்கள் அடுத்த செப்டம்பரில் முடிவடைகின்றன.
எனினும் நான்கு வயது தருணிகாவிற்கு விசா வழங்கப்படவில்லை – குடும்பத்தினர் இன்னமும் சமூக தடுப்பிலேயே வாழ்கின்றனர்.
தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழ் குடும்பத்தினர் பிரிட்ஜிங் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என அவர்களின் சட்டத்தரணி கரீனா போர்ட் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் இந்த விவகாரம் குறித்து இன்னமும் ஆர்வத்துடன் உள்ளனர் தமிழ் குடும்பத்திற்கு இன்னமும்ஆதரவுள்ளது என அவர்தெரிவித்துள்ளார்.
எனினும் தேர்தல்வரை இந்த வழக்கில் அடுத்த கட்ட முன்னேற்றம் ஏற்படாது என போர்ட்டும் பிரெட்ரிக்சும் தெரிவித்துள்ளனர்.
தொழில்கட்சியினர் வெற்றிபெற்றால் அவர்கள் மீண்டும் பயோலோலாவிற்கு வருவார்கள் என பிரெட்ரிக்ஸ்தெரிவித்துள்ளார்.

தேர்தலில் மொறிசன் அரசாங்கம் வெற்றிபெற்றால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என ஆதரவாளர்கள் கவலை கொண்டுள்ளனர் எனஅவர்தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் அவர்கள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதிஅளிக்கும் என நாங்கள் நம்பவில்லை ஏனென்;றால் இவர்கள்இரண்டு பதவிக்காலத்தில் எதனையும் செய்யவில்லை எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.