வறட்சி நிவாரண நடவடிக்கைகளுக்கு உலக உணவுத்திட்டம் ஆதரவு

291 0

world_food_program-720x480வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்குவதாக உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எதரின் கொஸின் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

வறட்சி காரணமாக விவசாயம் மற்றும் நீர் மின் உற்பத்திகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கை வரவுள்ளதாகவும் உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எதரின் கொஸின் இதன்போது தெரிவித்துள்ளார்.

வறட்சி நிவாரண நடவடிக்கைகளுக்கு சர்வதேச அமைப்புக்களின் உதவியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.