வெளிநாடு ஒன்றின் சபாநாயகர் நாடாளுமன்றத்தில்

236 0

தென் கொரியாவின் நாடாளுமன்ற சபாநாயகர் Park Byeong-seug இன்று இலங்கையின் நாடாளுமன்றத்தை காண விஜயம் செய்துள்ளார்.

அப்போது நாடாளுமன்றத்தின் அவையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இருக்கவில்லை என்பதால், எதிர்க்கட்சிகள் அதனை விமர்சித்துள்ளன. ஆளும் கட்சியினரின் இந்த செயல் சர்வதேச ரீதியில் நாட்டை தரம் தாழ்த்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  ரணில் – “கொரியாவின் நாடாளுமன்ற சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகின்றாரா?”.

பிரதி சபாநாயகர்- ஆம், வருகின்றார்.

ரணில் – சபை வெறுமையாக இருக்கின்றதே பிரதி சபாநாயகர் அவர்களே. இது எம்மை அவமதித்துக்கொள்வது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஓரளவுக்கு இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் எவருமில்லை. ஆசனங்கள் வெறுமையாக உள்ளன. இப்படியான நிகழ்வுகள் நடக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கலந்துரையாட வேண்டும் என ரணில் கூறியுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தை தென் கொரிய சபாநாயகரை இலங்கை சபாநாயகர் வரவேற்றார்.

அப்போது தென் கொரியாவின் சபாநாயகர், சபாநாயகர்களின் கூடத்தில் இருந்தார்.

தென் கொரிய நாடாளுமன்ற சபாநாயகரை இலங்கை நாடாளுமன்றத்திற்கு வரவற்பதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, வருகை தந்துள்ள தென் கொரிய நாடாளுமன்ற சபாநாயகரை அன்புடன் வரவேற்பதாக கூறினார்.

வெளிநாடு ஒன்றில் இருந்து அரசியல் விருந்தினர் ஒருவர் விஜயம் செய்துள்ள சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் இருக்கவில்லை என்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது விமர்சனத்தை முன்வைத்தார்.