கொழும்பு துறைமுக நகரில் கழிவுகளை எறிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

225 0

கொழும்பு துறைமுக நகருக்குச் சென்று கழிவுகளை கடலில் எறிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகருக்கு வருபவர்கள் சுற்றியுள்ள நீரில் குப்பைகளை ஈடுவது தொடர்பான பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதாக கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

கடல் மாசு தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அத்தகைய குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கடலை சூழவுள்ள கடலில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில், கொழும்பு துறைமுக நகருடன் இணைந்து விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் பொதுவாக இலங்கை கடற்கரைகளுக்குச் செல்லும் போது கடல் சூழலில் கழிவுகளை வெளியேற்றுவதைத் தவிர்க்குமாறும் அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூர் கடல் சூழல் மிகவும் மாசுபட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.