வடக்கு மெக்சிகோவில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொவடக்கு மெக்சிகோவில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.ல்லப்பட்டனர்.
மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் மாண்டெர்ரி நகரில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் மாணவன் ஒருவன் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்களும், ஒரு ஆசிரியருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் மூவரும் இறந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இருப்பினும் 3 பேர் உயிரிழந்ததற்கான உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து கல்லூரியின் வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவனுக்கு 12 வயது தான் இருக்கும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.