ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை

374 0

201701182258412961_Jallikattu-row-two-days-leave-announced-for-TN-law-colleges_SECVPFஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிப்பதாக கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்தன.

இந்நிலையில்,  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கோவை அரசு கல்லூரிக்கும் நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அனைத்து துறைகளுக்கும் 22-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, விடுதியை விட்டு வெளியேற மாணவ, மாணவிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.