ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழகத்தில் லாரிகள் இயக்கப்படாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுபெறும் நிலையில், பல்வேறு அமைப்புகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழகத்தில் லாரிகள் இயக்கப்படாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
அதேபோல், மணல் லாரிகளும் இயக்கப்படாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் தெரிவித்து உள்ளது.
முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டம் வலுப்பெற்றதை அடுத்து, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜனவரி 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் கருப்பு பேஜ் அணிந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க போவதாக தமிழ்நாடு ஆசிரியர் நலச் சங்க தலைவர் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.