கிரிக்கெட் இருக்கும் வரை இலங்கை- இந்தியாவிற்கிடையில் முரண்பாடு இருக்காது

276 0

2058165462ranilwikகிரிக்கெட் இருக்கும் வரையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் முரண்பாடு இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டு நடைபெறும் வரையில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் இடம்பெற வாய்ப்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலும் இந்தியாவிலும் கிரிக்கெட் விளையாட்டு ஓர் மதமாக பார்க்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தெற்காசிய வலய பிராந்திய வலய நாடுகளுக்கு இடையேயும் அதற்கு அப்பாலும் வர்த்தக உறவுகளைப் பேணிக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகளுக்கும் தமது நாட்டுக்கும் இடையில் சிறந்த உறவு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கிரிக்கட் விளையாட்டு விளையாடப்படாவிட்டால் முரண்பாடுகள் ஏற்படக்கூடும் என அவர் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.