மஹிந்தவின் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் முஸ்லிம் அமைப்புகள்!

289 0

picமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாட்டுக்கு முஸ்லிம் அமைபுகள் சில ஆதரவு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் மக்கள் பேரணிக்கு 4 முஸ்லிம் அமைப்புகளின் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.பேரணிக்கான நிதியுதவி மற்றும் ஆளணி உதவிகளை பெற்றுத்தர குறித்த அமைப்பினர் உறுதியளித்துள்ளனர்.

அத்துடன் இந்த பேரணியை வெற்றியடைய செய்வதற்கு தேவையான ஆதரவினை வழங்குவதாக, குறித்த அமைப்பின் பிரதிநிதிகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.