ஜெர்மனியில் டைனோசர்கள் வாழ்ந்த நகரங்கள் கண்டுபிடிப்பு

423 0

201607120108058565_Tyrannosaurs-there-was-in-northern-Germany-during-Jurassic_SECVPFஜெர்மனி நாட்டில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஜெர்மனியில் டைனோசர்கள் வாழ்ந்தனவா என்பது குறித்து பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், மேற்கு ஜெர்மனியில் இறைச்சி உண்ணும் இனத்தை சேர்ந்த டைனோசர்கள் வாழ்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதற்கு ஆதாரமாக இந்த வகையை சேர்ந்த ஒரு டைனோசரின் பல்லை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில், சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஜெர்மனி கடல் சூழ்ந்த பகுதியாக இருந்துள்ளது.குறிப்பாக, தற்போதைய பெர்லின் மற்றும் ஹேம்பர்க் நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் டைனோசர்கள் வாழ்ந்துள்ளது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

டைனோசர்களின் படிமங்களை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் வெளியாகும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.