எல்லை நிர்ணய அறிக்கை இன்று அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையில் கைச்சாத்திடாதிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதி இன்று அதில் கைச்சாத்திட்டார்.
இதனை அடுத்தே குறித்த அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடக சந்திப்பை நடத்திய அமைச்சர் பைசர் முஸ்தபா, குறித்த அறிக்கையில் காணப்படும் சிற்சில விடயங்கள் திருத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
அந்த திருத்தப்பணிகள் நிறைவு பெற்றதும், அதனை உடன் வர்த்தமானியில் வெளியிட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.