கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள தருமபுரம் 08,ஆம் யூனிற் கிராமத்தின் காட்டுப்பகுதியில் சட்ட விரோதமா இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு கசிப்புக் கோடா 252, லீற்றரும், கசிப்பு 41, லீற்றர் ஆகியவற்றுடன் கசிப்புக் காச்சுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவ இடத்தில் வைத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ததுடன் கசிப்பு உற்பத்தி நிலையமும் நிர்மூலமாக்கப் பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் நடை பெற்றுள்ளது.
தருமபுரம் பொலிஸ் நிலையத்திற்கு பொது மகன் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து,
தருமபுரம் பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி எம். எம். என். டீ. சதுரங்கா தலைமையில் சென்ற பொலிஸ் அணியினரின் திடீர் முற்றுகையின் போதே கசிப்பு உற்பத்தி நிலையம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளதுடன், கசிப்பு உற்பத்தி நிலையமும் நிர்மூலமாக் கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கைப்பற்றப்பட்டுள்ள தடயப்பொருட்கள் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்ட்டிருப்பதுடன் கைதானசந்தேக நபரிடம் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் தடயப்பொருட்களுடன் சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்படுத்தப்படவுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது ,