விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப்போவதில்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி விற்பனை தொடர்பில் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பிலான விசாரணைகள் பூர்த்தியாகி குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரையில் எந்தவொரு அரசாங்கத்தின் பதவியையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கோப்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணைகள் பூர்த்தியாகி அறிவிக்கப்படும் வரையில் காத்திருக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிணை முறி குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மற்றும் உச்ச நீதிமன்றினால் தாம் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலையாவதன் மூலம் சர்வதேச நிதிச் சந்தை வட்டாரத்தில் தமக்குக் காணப்படும் நன்மையை பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.