இந்தியா என்.எஸ்.ஜி.யில் இணைய சீனா மீண்டும் ஆட்சேபம்

260 0

201701161721442999_Indias-NSG-membership-cant-be-farewell-gift-China-to-US_SECVPFஅணு ஆயுத தடுப்புச் சட்டத்தில் கையெழுத்திடாத வரை இந்தியா என்.எஸ்.ஜியில் இணைய சீனா ஆதரவு தராது என அமெரிக்காவுக்கு சீனா பதில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக் காலம் வரும் 20-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அமெரிக்காவில் மத்திய ஆசியாவிற்கான செயலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசும்போது, இந்தியா என்.எஸ்.ஜியில் இணைவதற்கு சீனா வெளிப்படையான முடிவைத் தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அமெரிக்காவின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், “இந்தியா, அணு ஆயுத பரவல் தடுப்புச் சட்டத்தில் கையெழுத்திடாதவரை என்.எஸ்.ஜி.யில் இணைய சீனா ஆதரவு தராது. ஒபாமா அரசின் பிரிவு உபச்சாரப் பரிசாக நாங்கள் இந்தியாவுக்கு ஆதரவு தந்துவிட மாட்டோம். சீனாவின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான்” எனக் கூறியுள்ளார்.
இந்தியா என்.எஸ்.ஜி.யில் இணைய சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மேலும், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களை நடத்திவரும் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. சபை அறிவிக்க இந்தியா கொண்டுவந்த தீர்மானத்தை சீனா தனது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது.
என்.எஸ்.ஜி.யில் இணைவதற்கு பாகிஸ்தானும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.